“Kangal Rendum Pesuthey” – Kausi’s Beginning [Official Video]


கண்கள் ரெண்டும் பேசுதே உள்ளம் உன்வசம் ஆனதே என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள் கள்ளம் இல்லாப் பெண்ணவள் கருங் கூந்தல் வாசனை ஆயிரமே கண்ணுக்குள் காண்பவை வைரமே ஓ.… ஓ… சொற்கள் யாவும் மின்னுமே நதியின் அழகைப் போலவே…. மனதைக் கேட்டாய் வசதி கேட்டாய் நேரத்தைக்கூட நீ கேட்டாய் எடுத்துத் தந்தேன் முழுதும் தந்தேன் உயிரைக்கூட நான் தந்தேன் ஏனோ ஏனோ ஏனோ இரு விழியில் காதலைப் புதைத்தாய் மீண்டும் மீண்டும் மீண்டும் அதை மறைத்தே பொய்களை அளித்தாய் என்னை விட இன்னொருவன் கூட நீ…  ஓ… ஓ… கண்கள் ரெண்டும் பேசுதே உள்ளம் உன்வசம் ஆனதே என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள் கள்ளம் இல்லாப் பெண்ணவள் கருங் கூந்தல் வாசனை ஆயிரமே கண்ணுக்குள் காண்பவை வைரமே ஓ… ஓ… சொற்கள் யாவும் மின்னுமே நதியின் அழகைப் போலவே… அவளை எண்ணி முழுதும் நம்பி தினமும் துடிக்கிறேன் வெம்பி தெரிந்து கொண்டேன் புரிந்து கொண்டேன் அவளின் இரு முகம் கண்டேன் உண்மை உண்மை உண்மை வெளிவரவே காத்திருந்தேன் அடடா என்னை என்னை என்னை அவள் மறக்கும் நேரம் தோன்றும் அடடா கண்ணீர்களும் ஏமாற்றமும் தாங்கிட நான் ஓ… ஓ… கண்கள் ரெண்டாய் பேசுதே உள்ளம் தன் வழி போனதே ஏன் எந்தன் காதலில் வலியைத் தந்தவள் கள்ளம் உள்ள பெண்ணவள் கருங்கூந்தல் வீசி சென்றவளே கண்ணுக்குள் காண்பது மின்னலே ஓ… ஓ… சொற்கள் யாவும் பொய்களே நதியின் கரைகள் போலவே ஓ… ஓ… கண்கள் ரெண்டாய் பேசுதே உள்ளம் தன் வழி போனதே ஏன் எந்தன் காதலில் வலியைத் தந்தவள் கள்ளம் உள்ள பெண்ணவள் கருங்கூந்தல் வீசி சென்றவளே கண்ணுக்குள் காண்பது மின்னலே ஓ… ஓ… சொற்கள் யாவும் பொய்களே நதியின் கரைகள் போலவே

100 thoughts on ““Kangal Rendum Pesuthey” – Kausi’s Beginning [Official Video]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *